Saturday, December 17, 2011

கண்ணில் பிரஸர் குளுக்கோமா Glucoma


பிரஸர் என்பது உயர்இரத்த அழுத்தம். இது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஐ(கண்) பிரஸர் பற்றி அப்படியல்ல.

ஐ(கண்) பிரஸர் என்று பலரும் சொல்லுவது குளுக்கோமா (Glucoma) என்ற நோயைத்தான். பொதுவாக கண்ணினுள்ள திரவத்தின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும்போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.


கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, நோயாளி தனது பார்வை பறிபோகின்னறது என்பதை நோயாளி உணராமலே அவரது பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான நோயாகும்.

பார்வை நரம்பு பாதிப்புறவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும்.


பார்வை நரம்பு என்பது நாம் பார்க்கும்போது எமது விழித்திரையில் விழுகின்ற விம்பங்களை மூளைக்குக் கடத்துகின்ற நரம்பாகும். நரம்பு என ஒருமையில் சொல்லப்பட்டபோதும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமான நுண்ணிய பார்வை நாரம்புகளைக் (Optic Fibers) கொண்டதாகும்.

குளுக்கோமாவில் பல வகைகள் இருந்தாலும் மிக அதிகமானது திறந்த கோண குளுக்கோமா (Open angle Glucoma) தான்.

யாருக்கு வரும்

  • நெருங்கிய குடும்பத்திரிடையே இருந்திருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
  • அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
  • வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
  • நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
  • ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
  •  கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள் படிப்படியாக நீண்ட காலத்தில் ஏற்படுவதால் நோயாளி அதை உணர்ந்து கொள்ள மாட்டார். அதுவும் இப்பார்வை இழப்பானது வெளிப்புறத்தில் (Side Vision) ஏற்படுவதால் உணர்ந்து கொள்வது கடினம்.

பக்கப் பார்வை இழப்பு எனச் சொல்லாம்.


அதாவது நீங்கள் நேரே கணனியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் ஏதாவது அசைந்தால் கூட அந்த அசைவை உங்களால் காண முடியும்.

ஆனால் குளுக்கோமா நோயளிகளுக்கு அவரது பார்வையின் பரப்பானது வெளிப்புறத்திலிருந்து குறைந்து கொண்டு வரும். ஆனால் நேர் பார்வை வழமைபோல தெளிவாக இருக்கும்.

இதனால்தான் அவருக்கு தனது பார்வை இழப்பை உணர்ந்து கொள்ள முடியாதிருக்கிறது.


இதனைக் கவனிக்காது விட்டால் பார்வை மேலும் குறைந்து வரும். சிலகாலத்தின் பின்னர் ஒரு குழாயினூடாகப் பார்ப்பது போல நேரே இருப்பவை மட்டுமே தெரியும். இறுதியில் முழுப் பார்வையும் பறிபோகும் அவலம் நேரும்

தடுப்பது எப்படி?

நோயின் தாக்கம் பார்வைiயில் சேதத்தை ஏற்படுவதற்கு முன்னரே நோயைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் ஒரே வழி.

கண் மருத்துவரிடம்

இந்நோய் வரக் கூடிய சாத்திய உள்ளவர்கள்
  • கண் மருத்துவரை அணுகி தமது கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 
  • இப்பொழுது பாதிப்பு இல்லாவிட்டாலும் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஓரு முறையாவது கண் மருத்துவரிடம் போவது அவசியம்.

கண்ணில் பார்வைக் குறைவு ஏற்பட்டால் நீங்களாக கடையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும். அச் சந்தர்ப்பத்தை கண் மருத்துவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். அவர் உங்கள் கண்களின் உட்பகுதியை விசேடமான கருவிகள் மூலம் பரிசோதிக்கும்போது குளுக்கோமா ஆரம்ப நிலையில் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

1.    ரோனோ மீற்றர் (Tonometer) என்ற கருவி உங்களது கண்ணினுள் இருக்கும் அழுதத்தை அளவிட உதவும்.
2.    கண் பார்வையின் பரப்பை அளவிடும் (Visual field test) பரிசோதனை இது உங்கள் பார்வையின் பரப்பளவில் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உதவும்.
3.    (Dilated eye Exam) இது கண்ணின் ஒளி புகும் பாதையை விரிவித்து அதனூடாக விழித்தரையையும், பார்வை சரம்பையும் பிம்பம் பெருக்குவிக்கும் கண்ணாடி ஊடாகப் பார்த்து அவற்றில் பாதிப்பு இருக்கிறதா எனக் கண்டறிவதாகும்.


சிகிச்சை

நோயின் நிலக்கு ஏற்ப சிகிச்சை முறைகளில் மாற்றம் ஏற்படலாம்.

1.  துளி மருந்துகள்
அதிகமானோருக்கு இவை மட்டுமே கண்ணின் பிரசரைக் குறைத்து, பார்வை பறிபோகாமல் தடுப்பதற்குப் போதுமானது. பிரஸர் சரியான நிலைக்கு வந்தாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். தினமும் ஒரு முறை உபயோகிக்கும் மருந்துகள் உள்ளன. பலமுறை விட வேண்டியவையும் உண்டு. இது அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்தது. அவற்றை மருத்துவர் கூறுவதுபோல சரியான முறையில் கண்ணில் சரியான நேர இடைவெளிகளில் விட வேண்டும்.
2.    மாத்திரைகள்
தனியாக துளி மருந்துகளை உபயோகித்து கண் பிரசரைக் குறைக்க முடியாவிட்டால் மாத்திரைகளும் தேவைப்படலாம்.
3.    சத்திர சிகிச்சை
இப்பொழுது லேசர் முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படுகிறது. கண்ணில் மேலதிகமாக நீர் தேங்காது தடுத்து கண் பிரசரைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

14 comments:

ரஹீம் கஸாலி said...

நல்ல பயனுள்ள பதிவு சார்.

Jaleela Kamal said...

நல்ல அருமையான தகவல்

5 வருடம் முன் கண்ணில் பிரஷர் வhந்தது பிற்கு இத்ுவரை ஒன்றும் இல்லை அப்ப மறுபடி கண் பிரஷர் செக் பண்ணனுமா?

Samy said...

Good morning doctor. An useful article. samy

இராஜராஜேஸ்வரி said...

கண் எனப் போற்றி பாதுகாக்கவேண்டிய பயனுள்ள பகிர்வுக்கு நன்றி டாகடர் ஐயா..

வல்லிசிம்ஹன் said...

நன்றி டாக்டர். கண் சிகித்சைக்காக எல்லாப் பரிசோதனையும் செய்து கொண்டேன். கண்ணில் அழுத்தம் இருப்பதனால் சொட்டு மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள். காடாராக்ட் வைத்தியம் முடிந்ததும் இதுவும் சரியாகிவிடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.மிகவும் பயனுள்ள பதிவு.

Muruganandan M.K. said...

நன்றி @ரஹீம் கஸாலி

Muruganandan M.K. said...

@Jaleela Kamal கண்ணில் பிரஸர் என்றால் தொடர்ந்து உபயோகிப்பதற்கு சொட்டு மருந்துகள் தந்திருப்பார்களே. நிறுத்தி விட்டீர்களா?
திரும்பச் சென்று ஆலோசனை பெறுங்கள்.

kovaikkavi said...

மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துகள். மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

எஸ் சக்திவேல் said...

>நெருங்கிய குடும்பத்திரிடையே இருந்திருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

யோசிக்கவேண்டிய விடயம்தான்.

Muruganandan M.K. said...

நன்றி @ kovaikkavi

அம்பலத்தார் said...

டாக்டர், நல்லதொருவிடயத்தை பகிர்ந்துள்ளீர்கள். எனக்கும்கூட இரண்டுகண்களிலும் உயரழுத்தம் தொடக்கநிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு சத்திரசிச்சை செய்யப்பட்டதன் பின் சொட்டுமருந்து பாவிப்பதில்லை ஆனாலும் 6 மாதங்களுக்கு ஒருதடவை நீங்கள்கூறிய இரு சோதனகளும் கண்வைத்தியரால் செய்யப்படுகிறது. மருந்து பாவிக்காமல்விடுவதால் பாதிப்புகள் இல்லையா?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி Sir!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Kanchana Radhakrishnan said...

மிகவும் பயனுள்ள பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல அருமையான தகவல்

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்