திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?
- பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
- படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
- யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
- சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.
இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும்.
திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?
- பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.
- சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.
மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.
பல காரணங்களினால் இது ஏற்படலாம்.
மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது
கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.
* கடுமையான வயிற்றோட்டம்,
* சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல் போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.
அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
*கடுமையான மாதவிடாய் பெருக்கு,
*மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.
* வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்
குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.
உதாரணமாக-
- குடற்புண், ஈரல் சிதைவு, புற்றுநோய்கள் எனப் பல.
குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.
திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது.
நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.
உதாரணமாக
- தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.
- விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.
- வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.
நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.
- பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக,
- இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.
படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.
![]() |
| படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும் |
மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.
மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.
சில மருந்துகளும் காரணமாகலாம்.
உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.
மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.
மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0.0
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.
மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.
மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0.0






15 comments:
>பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக
இதைமட்டும் சிறுவயதில், பாடசாலைக்காலத்தில் நேரில் கண்ட ஞாபகங்கள் உண்டு.
மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.
மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.
மிகப்பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றி டாக்டர் ஐயா..
நிறைய முறை இந்த மாதிரி மயக்கங்களைக் கேள்விப்பட்டு பயந்ததுண்டு..
கர்ப்பமான பெண்களும் கூட சில முறை இப்படி மயங்குவது உணடே!
பல காரணங்கள் கூறினீர்கள் அருமை. (முன்பு என் கணவர் இரத்தம் பார்த்தால் மயங்கி விழுவார். ) பலர் அறிவது சிறப்பு மிக நன்றியும் வாழ்த்துகளும் ஐயா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மிகச்சரியான பதிவு.
தீடீர் மயக்கம் காரணமே இல்லாமல் எல்லோருகும் வருது,
லோ பிபி யாக இருந்தாலு்ம் இப்படி மயக்கம் போட்டு விழுகின்றனர்.
எஸ் சக்திவேல்
நேற்றுக்கூட அண்மையில் உள்ள ஒரு பெண் பாடசாலையிலிருந்து மயங்கிவிழுந்த மாணவியை கொண்டு வந்திருந்தார்கள்.
அப்படி நிற்கும் விழுவதைத் தடுக்க நின்று கொண்டிருக்கும்போது கால் விரல்களையும், காலையும் அசைத்துச் செய்யும் பயிற்சியைச் சொல்லிக் கொடுத்தேன்.
ஆனாலும் விழுபவர்கள் விழுந்து கொண்டேயிருப்பார்கள்.
ஆம் kovaikkavi
இரத்தத்தைப் பார்க்கும்போது பலருக்கு அதிரி்ச்சியில் மயக்கம் வருகிறது.
நான் மருத்துவ மாணவனாக இருக்கும் முதல் முதலாக சத்திரசிகிச்சை பார்க்கும்போது பக்கத்தில் நன்றி நண்பன் மயங்கி விழுந்தது ஞாபகம் வருகிறது.
அருமையான பதிவு.பல விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி
ஒரு சின்ன ஜோக்
காதல் மயக்கத்தை எதில் சேர்ப்பது டாக்டர்
நல்ல விளக்கமான பதிவு.நன்றி டாக்டர் !
டாக்டர் அவர்களுக்கு, வணக்கம்... பதிவுலகில் புதியவன். இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு முதலில் நன்றி சார். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு வாழ்த்துக்கள். நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 16 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
டாக்டர் வழமைபோல மீண்டுமொரு விழிப்புணர்வுப் பதிவைத் தந்ததற்கு நன்றிகள்.
வணக்கம் ஐயா,
நலமா?
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க. குறிப்பெடுத்து வைத்துள்ளேன்,
மயக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும், மயக்கம் ஏன் ஏற்படுகின்றது என்பது தொடர்பிலும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
நான் பாடசாலைக் காலத்தில் பல பெண் பிள்ளைகளில் இதைக் கண்டிருக்கிறேன் ஐயா
தங்கள் பயனுள்ள பதிவுக்குனன்றி
@ லோகன்
காதல் மயக்கம்
கலியாணத்தில் மறையும்.
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்