மூட்டு நோய்களைக் குணமாக்க உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது உதவுமா?
வலிகளுக்கும் மூட்டுகளுக்குமான உறவு அண்ணன் தம்பி போல மிக நெருக்கமானவை. விட்டுப்பிரியாதவை.
இதன் காரணமாக மூட்டுவலிகளினால் துன்பப்படுவோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள் எதைப் பற்றிக் கேள்விப்படாலும் அதனைப் பரீட்சித்துப் பார்க்காது விடமாட்டார்கள். வேறும் ஏதாவது இருக்கிறதா எனத் தேடியலைவார்கள்.
மூட்டுகளுக்கான எளிமையான பயிற்சிகள் மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும்.
மூட்டு நோய்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அது தனி ஒரு நேயால்ல. மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய பல நோய்கள் யாவற்றையும் (Arthritis) என்றுதான் சொல்லுவார்கள். சுமார் 100க்கு மேற்பட்ட அத்தகைய நோய்கள் இருக்கின்றன.
அத்தகைய நோய்களைக் குணப்படுத்த உணவுப் பத்தியம் உதவுமா என்று கேட்டால்
- நிச்சயமாக இல்லை.
- ஆயினும் மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவுமுறை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
![]() |
| சமச்சீரான உணவு உதவும் |
எவ்வாறான உணவுமுறை உதவும்
- சமச்சீரான உணவு. உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், உடலுக்கு ஏற்ப எடையை சரியான அளவில் பேணவும் உதவும். பொதுவான உடல் நிலை நல்ல நிலையில் இருந்து எடையும் சரியான அளவில் பேணப்பட்டால் மூட்டு நோய்களின் தாக்கம் குறைவடையும்.
- எடையைச் சரியான அளவில் பேணுவது மிக முக்கியமாகும். எடை அதிகரித்தால் முழங்கால். இடுப்பு போன்ற எடை தாங்கும் மூட்டுகளுக்கு சுமை அதிகமாகி நோய் தீவிரமடையும்.
- எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் திடீரென கடுமையாக உணவுகளைக் குறைப்பதும் பட்டினி கிடப்பதும் நோயின் தீவிரத்தை அதிகரிக்குமே அன்றிக் குறைக்காது.
- தாராளமாக நீராகாரம் எடுங்கள். ஆனால் மதுபானம் கூடாது. இனிப்பு அதிகமுள்ள மென்பானங்களையும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.
- கல்சியம் செறிவுள்ள உணவுகள் அவசியம் தேவை. பால், யோகொட், தயிர், கீரை வகைகள், சிறுமீன்கள், பயறின உணவுகளில் கல்சியம் அதிகம் உண்டு.
தவிர்க்க வேண்டியவை உள்ளனவா?
'மூட்டு நோயெனற்றால் வாதம்தானே?
- அப்படியென்றால் தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்ற குளிர்ச்சாப்பாடுகள் கூடாதுதானே' என்று பலர் கேட்பார்கள்.
- வேறு சிலர் 'தேசிப்பழம், உருளைக்கிழங்கு கூடாது என்பர்.
ஒரு சில நோய்களில்
கவுட் (Gout)
ஆயினும் கவுட் (Gout) என ஒரு மூட்டு வருத்தம் உண்டு. இது இலங்கையில் காணப்படுவது குறைவு. இந்நோய்க்கும் குருதியில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதற்கும் தொடர்புண்டு.
இந்நோயுள்ளவர்கள் இறைச்சியில் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றையும், நண்டு போன்ற கடலுணவுகளையும், ஈஸ்ட் அதிகமுள்ள மாமைட், பியர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
ஆனால் ஏனைய மூட்டுவலிக்காரருக்கு அவற்றைத் தவிர்ப்பதால் பயன் ஏதும் இல்லை.
ரூமரெடியிட் ஆத்திரைடிஸ்
ரூமரெடியிட் ஆத்திரைடிஸ் என்பது இங்கும் பரவலாக உள்ளது.
இவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு உதவலாம் எனத் தெரிகிறது. வலிநிவாரணிகள் போல நல்ல சுகத்தைக் கொடுக்காது என்ற போதிலும் பக்கவிளைவுகள் இல்லாதததால் உட்கொள்வதில் பயமில்லை.
ஒமேகா 3 கொழுப்பானது கொலஸ்டரோல் குறைப்பிற்கும், இருதய நோய் சிலவற்றைத் தடுப்பதற்கும் உதவும். சல்மன், சார்டீன் போன்ற மீன்களிலும் எள்ளிலும் இருக்கிறது. மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.
தவறான கருத்து
உங்களது நோயை ஏதாவது ஒரு உணவு அதிகரிக்கிறது என நீங்கள் கருதினால் உடனடியாக அதை நிறுத்திவிடாதீர்கள்.
- தினமும் உண்ணும் உணவு பற்றிய நாட்குறிப்பை ஒரு மாதத்திற்கு குறித்து வாருங்கள்.
- உங்கள் நோயின் நிலை, குறித்த உணவு ஆகியவை பற்றி உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள்.
- நீங்களாக நிறுத்த வேண்டாம்.
ஏனெனில் பொதுவாக மூட்டு வலிகள் காலத்திற்குக் காலம் காரணம் எதுவுமின்றி தீவிரமாவதும் தானாகவே மறைவதும் உண்டு. எனவே நீங்கள் அது திரும்ப வருதற்குக் காரணம் ஒரு உணவு அல்லது ஒரு உணவு வகை என நம்புவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.
ஏனெனில், எந்த ஒரு உணவையும் தவிர்ப்பதன் மூலம் எந்தவொரு மூட்டு நோயையும் தணிக்கலாம் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இதுவரை கிடையாது. (ஏற்கனவே குறிப்பட்ட கவுட் தவிர).
- குறிஞ்சா இலை,
- முடக்கொத்தான்
இவை பற்றி ஆய்வுகள் நடந்ததாக அறியவில்லை. அத்துடன் வேறெந்த மருந்தும் பயன்படுத்தாமல் இவற்றை மட்டும் பயன்படுத்தி குணமடைந்தவர்கள் இருக்கிறார்களா?
இருந்தால் அது பற்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் தேவை.
வலிநிவாரணி வெளிப் பூச்சு மருந்துகள் உதவலாம்
எனவே
- குளிர், சூடு, பித்தம் எனச் சொல்லி எந்த ஒரு உணவையும் தள்ளி வைக்க வேண்டாம்.
- சமசீர் வலுவுள்ள (Balanaced Diet) நல்ல உணவாக உண்டு உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
தினக்குரலின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதியது.




10 comments:
ஒரு நல்ல தகவல்
மூன்றாம் கோணம்
பெருமையுடம்
வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30
இடம்:
ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்
போஸ்டல் நகர்,
க்ரோம்பேட்,
சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )
11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து
எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்
பதிவர் சந்திப்பு
thevaiyana pathivu
மூட்டுவலிக்காரர்களுக்கு நல்ல ஆலோசனை, நன்றி!
வணக்கம் ஐயா எப்படி உள்ளீர்கள் ?..அருமையனா பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் .............
நல்லதொரு பதிவு.நன்றி டாக்டர் !
>உதவும். சல்மன், சார்டீன் போன்ற மீன்களிலும் எள்ளிலும் இருக்கிறது.
நன்றிகள். சமன் நல்ல விலை, ஆனால் சுவை. சார்டீன் விலை குறைவு ஆனால் நல்ல "மணம்" நிறைந்தது. சமைத்தால் வீடு முழுக்க "சுகந்தம்" வீசும். வைத்தியர் ஐயா மீன் சாப்பிடுவதில்லை என்பதால் குறிப்பிடுகிறேன். (இலங்கையில் ரின்மீன் எல்லாவற்றையும் சமன் என்பார்கள், குறிப்பாக தென்பகுதியில், அது தவறு என்று இங்கு வந்துதான் தெரிந்தது) . ஆச்சிமாரின் favourite ஆனா எள்ளிலும் விடயம் உள்ளது போலுள்ளது.
முடக்கத்தான் இலை பற்றி ஆராய்ச்சி இல்லை என்று யார் சொன்னது ?..பல நூறு பி எச் டி களுக்கு தலைப்பாக உள்ளது இந்த அராய்ச்சி ..
உணவே முக்கியம் ..உங்களுக்கு தெரிந்த முடக்கு வாத நோயாளிக்கு உளுந்த வடை தினமும் மூன்று ,கொண்டக்கடலை சுண்டலும் சாப்பிட சொல்லி பாருங்கள் தெரியும் ..
இந்த கட்டுரையில்,உங்கள் பாதி கருத்தில் உண்மை உள்ளது ..மீதத்தை வன்மையாக எதிர்க்கிறேன் (நான் உங்கள் பரம ரசிகன் சார் -இது சத்தியம் )
ஆயுர்வேத மருத்துவன்
curesure4u நன்றி. உங்கள் ஆக்கபூர்வமான பின்னூட்டம் மகிழ்சியளிக்கிறது. அத்தகைய ஆராச்சிகளின் தொடுப்பைக் கொடுத்தால் (randomised double blind controlled trial)பலருக்கும் உதவியாக இருக்கும்.
சிறுகுறிஞ்சாவை நானும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். மருந்தாக அல்ல. உணவாக. அவ்வாறு உட்கொள்வதால் பிரச்சனை ஊதும் இல்லை.
மதிப்பிற்குரிய மருத்துவரே ..
நீங்கள் கேட்ட மாதிரி முடக்கதானுக்கான ஆராய்சிகளை தரமணியில் உள்ள IBMS-மெட்ராஸ் பலகலை கழகத்தில் பல ஆராய்சிகள் பயோ கெமிஸ்ட்ரி துறை மற்றும் பலர் பல்வேறு துறைகளிலும் மேற்கொண்டு வருகின்றனர் ,செய்துள்ளார்கள் ..மேலும் Reviw of literature -க்காக பல்லாயிரக்கணக்கில் இந்த முடக்கதானுக்கு மட்டும் கொட்டி கிடக்கிறது ..உதாரணதிற்கு http://www.ncbi.nlm.nih.gov/pubmed?term=Cardiospermum%20halicacabum%20
randomised double blind controlled trial-இந்த மாதிரி ஆராய்சிகளும் பல உள்ளது -நிச்சயமாக retropective study -இல்லை ..
உங்களுக்கு தெரிந்த முடக்கு வாத நோயாளிக்கு உளுந்த வடை தினமும் மூன்று ,கொண்டக்கடலை சுண்டலும் சாப்பிட சொல்லி பாருங்கள் தெரியும் ..என்ற எனது கேள்விக்கு பதிலை எதிர்பார்கிறேன் (நோயாளியின் வலி நிச்சயம் ,உளுந்து கொண்டைகடலையில் அதிகமாகும் )
நீங்கள் சிறுகுறிஞ்சான் உணவாக சாப்பிட்ட மாதிரி தான் எல்லா மூலிகைகளுமே உணவான கீரை மாதிரி தான் ..உணவே மருந்து ..மருந்தே உணவு
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்