உடற் பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை.
அதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.
- முக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.
- புதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை.
- “எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு ஏன் உடற்பயிற்சி என்பது பலரது விதண்டா விவாதம் ஆகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக் சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.
உடற் பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப் பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த நடைப் பயிற்சியானது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
ஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.
65 வயதிற்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதப்படனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.
உடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின்
எனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு.
ஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை.
ஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.
வேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறளை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுப்பாது இருப்பதற்காகவாவது தினசரி நடைப் பயிற்சி செய்யுங்கள்.
![]() |
| அறளை பெயர்தலைத் தடுக்க நவீன தொழில் நுட்பங்களில் ஈடுபாடு காட்டுவதும் உதவும் |
முது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு இன்றை வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்தததை நினைவுபடுத்தலாம்.
கம்பியூட்டர், இணையம், மொபைல் போன் போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.
தினமும் எவ்வளவு உடற் பயிற்சி, எத்தகைய உடற் பயிற்சி தேவை என்பவை பற்றி அறிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்.
எவ்வளவு உடற் பயிற்சி
அதீத எடைக்கும் புற்று நோய்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றி அறிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்.
எடை குறைப்புப் பற்றிய எனது நகைச்சுவைப் பதிவு
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0




20 comments:
மிகவும் பயனுள்ள எல்லோருக்கும் தேவையான பகிர்வு
( பொறை ஏறுதல் அதுக்கு என்ன காரணம்)
உடனே அவசர அவசரமா சாப்பிடுவதால் அல்லது பேசி கொண்டே சாப்பிடுவதால் சாப்பிடும் போது சிரிப்பதால் என்று சொல்லவேண்டாம் - இது எனக்கு தெரிந்தது)
சைனஸ் பிராப்ளத்தால் அடிக்கடி புறை யேறுமா?
என்னேரமும் தொண்டையில் அதிகமாக நீர் சுரந்து அதை முழுங்க் முடியாமல் புறை யேறுதல்
இன்னும் எப்படி சொல்லனுமுன்னு சொல்ல தெரியல.
very useful and informative.
ம்...அப்ப நடக்கச் சொல்றீங்கள் !
ஐயா கண்கெட்ட பிறகு சூரிய நம்காரம் செய்யாமல் நான் இப்பவே செய்கிறேன்.. நல்ல விளக்கமான பதிவு மிக்க நன்றி...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
@Jaleela Kamal
அவசர அவசரமாகச் சாப்பிடும்போது உணவுத் துகள்கள் தவறுதலாக சுவாசக் குழாயினுள் போய்விட்டால், அதை வெளியேற்ற சுவாசத் தொகுதி செய்யும் முயற்சிதான் புரைக்கேறல்.
//என்னேரமும் தொண்டையில் அதிகமாக நீர் சுரந்து அதை முழுங்க் முடியாமல் புறை யேறுதல்//
எனக்கு இதுக்கு என்ன செய்வதுன்னு சொல்லுங்கள்
ஒரு தடவை என்றால் பரவாயில்லை 3 மாதமாக புறை யேறுதல்,
சாப்பாடு சாப்பிடும் நேரத்தில் மட்டும் அல்ல எப்போதும் ,
சைனஸ் பிரச்சனையாலும் புரையேறலாம். Post nasal drip என்பார்கள். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.
நேரடிப் பரிசோதனை, எக்ஸ் ரே போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். நேரடியாக உங்கள் மருத்துவரைக் கண்டு பேசுவதுதான் வழி.
டாக்டரய்யா!
”அறள பேருதல்” பற்றி எழுதும் போது நீங்க என்னை நினைக்கல தானே? இல்ல ஒரு சந்தேகம் வந்ததுஅது தான் கேட்டன். அய்யா! நானெல்லாம் தினம் ஒரு மரதன் ஓடினாலும் இருக்கிற பிரச்சனைகள் தீராது....
நீங்க வர வர இப்படி எழுதி என்னை பயறுத்துகிறீர்கள்..
பயனுள்ள அருமையான பதிவு... சூப்பர்...
நான் ஷிப்ட் முறையில் வேலை செய்கிறேன் நடைப்பயிற்சி ரெகுலராக செய்ய முடியவில்லை. சர்க்கரை நோய் (பெற்றோரின் பரிசு)வேறு வந்து விட்டது. டாக்டர் கொஞ்சம் அட்வைஸ் ப்ளீஸ்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.
@ஹேமா.
என்னிடம் வரும் பல பெண்கள் தாங்கள் வீட்டில் காலை முதல் நடந்து கொள்கிறோம்தானே எனச் சாட்டுச் சொல்வார்கள்.
அந்த நடை அல்ல. கை கால்களை வீசி நடப்பது என ஆலோசனை கூறுவேன்.
நீங்கள் எப்படி?
அவசியமான பதிவு
நல்ல ஆலோசனைகள் தந்துள்ளீர்கள்
நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
ம.தி.சுதா நிங்கள் இப்பொழுதே நடைப பயிற்சி செய்ய ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி.
வருமுன் காப்போன் நீங்கள்
Thanks for a very important idea for good health, I will definitely try to follow this instruction in life.
@ Jayadev Das. You will definitely benefit. Thanks for comment
அட நடப்பதால் இப்படி இன்னொரு பயனா?
நல்ல தகவல். நன்றி.
கருத்துரைகளுக்கு நன்றி Pavi and மங்களூர் சிவா
நல்ல பதிவு.
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்