இது ஒரு வகை எக்ஸிமா ஆகும். நுமலர் எக்ஸிமா Nummular eczema என அழைப்பர்.
வழமையாக நாம் காணும் எக்ஸிமா போல கண்டபடி பரந்து கிடக்காமல், அதன் ஓரங்கள் நாணயங்கள் போல கூர்மையான சுற்றுவட்ட அடையாளத்துடன் இருக்கின்றன.
லத்தின் மொழியில் நுமலர் (Nummular) என்பதன் பொருள் நாணயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரத்தில் குணமடையாது. குளிர்காதத்தில் சற்று அதிகமாகும்.
காலம் செல்லச் செல்ல நடுப்பகுதி சற்று வெளிர் நிறமடைந்து சொரசொரப்பாக பங்கஸ் தொற்றுப் போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கும்.
பொதுவாகக் கால்களில் காணப்படும்.
சில வேளை முதுகு, நெஞ்சுப் புறத்திலும் காணப்படும். பொதுவாக ஏதாவது ஒவ்வாமையால் ஏற்படும் எக்ஸிமா ஆகும்.
வரட்சியான சருமம் உள்ளவர்களில் அதிகம் ஏற்படுகிறது.
இதனால் சருமத்தை உறுத்துபவை நோயைத் தீவிரமாக்கும்.
உதாரணமாக கம்பளி உடைகள், சோப், அடிக்கடி குளித்தல் ஆகியன நோயைத் தீவிரமாக்கும்.
ஏனைய சொரசொரப்பான துணிகளாலான ஆடைகளும், கடுமையான சோப்பில் துவைத்த ஆடைகளும் அவ்வாறே தீவிரமாக்கும்.
பொதுவாகச் சற்றுக் காரமான கோர்ட்டிகசோன் (Clobesterol) மருந்துகளே தேவைப்படும். அவற்றை தினமும் ஒரு முறைக்கு மேல் பூசக் கூடாது. சிறிய அளவு கிறீமை எடுத்தால் போதுமானது. சற்றுத் தேய்த்துப் பூசினால் நன்கு உறிஞ்சப்படும்.
ஆனால் அத்தகைய மருந்துகளை நொய்த தோலுடைய இடங்களான முகம், அக்குள், மலவாயில், பாலுறுப்பை அண்டிய இடங்களில் பூசக் கூடாது. அத்தகைய இடங்களுக்கு ஏற்ற வேறு காரம் குறைந்த மருந்துகள் உள்ளன.
இவர்களுக்கு வரட்சியான சருமம் இருப்பதால் தினமும் குளித்த பின் சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு வசிலின் Vaseline கிறீம் உபயோகிக்கலாம்.
அது பிடிக்காதவர்கள் விலையுர்ந்த கீர்ம்களான Efaderm, Neutrogena போன்றவற்றை உபயோகிக்கலாம்.
இவையும் பிடிக்காதவர்கள் இயற்கையான ஒலிவ் ஓயில், நல்லெண்ணெய் ஆகியவற்றை உபயோகித்துத் தமது சருமத்தை வரட்சியின்னிறிப் பாதுகாக்க முடியும்.
இவர்கள் சுடுதண்ணீர் உபயோகிப்பது நல்லதல்ல. எமது சூழலில் சாதாரண நீரே போதுமானது. இல்லையேல் நகச் சூட்டு நீரில் குளிக்கலாம். குளித்த பின் டவலினால் அழுத்தித் தேய்த்துத் துடைக்கக் கூடாது. நீரை ஒற்றி எடுப்பதே சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
வீரகேசரி வாரவெளியீடு 05.12.2010 ல் வெளியான எனது கட்டுரை
0.0.0.0.0.0.0



7 comments:
நல்ல தகவல் Dr.! நன்றி!
நல்ல பதிவு ஐயா பத்திரிகையில் படித்தேன் ஆனால் அங்கு பாராட்டக் கிடைக்காத சந்தர்ப்பத்தை இங்கே தந்தவிட்டீர்கள்....
மதி.சுதா.
நனைவோமா ?
வித்தியாசமான் வகை எக்சிமா இன்றுதான் கேள்விபடுகிறேன். பதிவுக்கு நன்றி.
மருத்துவரே ..நலமா ?..நான் ஒரு ஆயுர்வேத மருத்துவன் ..உங்களது அனைத்து கட்டுரைகளும் மிக்க அருமை ..நான் ஒரு மருத்துவ போரம் வைத்துள்ளேன் ..அதன் முகவரி ..www.ayurvedamaruthuvam.forumta.net -உங்களிடம் ஒரு விண்ணப்பம் இந்த போரத்தில் இணைந்து உங்களது மருத்துவ கட்டுரைகளை படைக்க வேண்டுகிறேன்
தங்களால் இந்த விண்ணப்பத்தை ஏற்க மனமுவந்து அழைக்கிறேன் .ஏற்றுகொள்வீர்களா ?
கருத்துரைகளுக்கு நன்றி ஜீ ம.தி.சுதா மற்றும் நிலாமதி
நன்றி ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்கள் புளக் பார்த்தேன். படங்களுடனும் விளக்கங்களுடனும் அம் மருத்துவ முறைகளை சிறப்பாகக் கொண்டு வருகிறீர்கள்.
அத்தகைய இடத்தில் மேலைத் தேய மருத்துவனான நான் செய்யக் கூடியது என்ன?
இருந்தபோதும் நீங்கள் விரும்பினால் எனது மருத்துக் கட்டுரைகளை அதில் வெளியிடலாம். ஆனால் பொருத்தமாக இருக்குமா என நீங்கள்தான் தீர்மானிக்க முடியும்.
உங்களது பதில் கருத்துரைக்கு மிக்க நன்றி ..
மக்கள் நோயற்று வாழ மருத்து முறைகள் பல உள்ளது ..உயிர் காக்கும் சிகிச்சையிலும் ..பல படித்தரங்களை கடந்து உலகளாவி பரந்து நிற்பது ஆங்கில மருத்துவ முறை தான் . நான் என்றுமே ஆங்கில மருத்துவ முறைகளை குறை சொன்னதே இல்லை ..
எனது விண்ணப்பம் -பொதுவான தகவல்களை பரி மாறும் கருத்துடைய கட்டுரைகளை நமது போரத்தில் நீங்கள் எனக்கு வேண்டுமானாலும் சமர்பிக்கலாம் ..
உங்கள் வரவை எதிர்பார்த்தவனாக
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்