பள்ளிச் சிறுவனான அவனது காலில் சிறிய தடிப்புகளாக இருப்பதைக் காணலாம்.
தனித்தனியாக அங்கொன்று இங்கொன்றாகவும் காணப்பட்டது. சிலரில் கூட்டம் கூட்டமாகவும் காணப்படுவது உண்டு. 1-3 மல்லி மீற்றர் வரையான அளவுகளில் இருக்கும்.
இதனை மொலஸ்கம் (Molluscum Contagiosum) என்பர் மருத்துவத்தில்.
நெஞ்சு, முதுகு, முகம், கழுத்து போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும்.
முத்துப் போலப் பளபளப்பாகவும், சற்று பிங்க் கலர்ச் சாயலில் இருக்கும்.
ஒவ்வொரு தடிப்பின் மத்தியிலும் சிறிய புள்ளி போன்ற பள்ளம் இருப்பது அதனைச் சுலபமாக அடையாளம் காண உதவும். அதனை அழுத்தினால் சீஸ் போன்ற ஒரு பதார்த்தம் வெளியேறும்.
உண்மையில் இது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
ஒருவரிலிருந்து மற்றவருக்கு படுகை மூலம் தொற்றும். உடைகள், டவல் மூலமும் பரவும். தனது உடலில் உள்ளதைத் தொட்டு விட்டு வேறு இடத்தில் தொட்டால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கும் பரவும்.
ஆயினும் வேகமாத் தொற்றும் நோயல்ல. உள்ளங்கை பாதங்களில் தோன்றுவது குறைவு.
ஆபத்தான நோயல்ல. எந்தவித மருத்தவமும் இன்றித் தானாகவே குணமாகும். ஆனால் பல மாதங்கள் எடுக்கக் கூடும்.
சிலர் சுரண்டி எடுப்பது(Curretage) , மினசக்தியால் சுட்டு எரிப்பது (Cautery) போன்ற
சிகிச்சைகளையும் செய்வர்.
Podophyllotoxin, மற்றும் Trichloro Acetic acid போன்ற சில கிறீம் வகைகளும் உதவும்.



4 comments:
தகவலுக்கு நன்றி டாக்டர்.
நல்ல தகவல்கள். இன்று தேடுதலில் தங்களின் அறிமுகம் கிடைத்தது. மருத்துவ தகவல்கள் அனைவருக்கும் உதவும்.
நல்ல தகவல்கள். இன்று தேடுதலில் தங்களின் அறிமுகம் கிடைத்தது. மருத்துவ தகவல்கள் அனைவருக்கும் உதவும்.
கருத்துரைகளுக்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா, ராஜா.
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்