Wednesday, September 15, 2010

தாய் புகைத்தலும் குழந்தையின் எதிர்கால உளநோய்களும்

எமது நாட்டில் பெண்கள் புகைப்பது குறைவு. ஆயினும் முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

சமூகத்தின் உயர்தட்டிலும் கீழ்மட்டத்திலும் பல பெண்கள் புகைக்கவே செய்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திலும் இலைமறைகாயாக இருக்கக் கூடும்.

வயதான பெண்கள் மட்டும் புகைப்பதில்லை
புகைத்தல் ஆபத்தானது. பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது என்பதை அறிவோம்.

பெண்கள் கரப்பமாயிருக்கம்போது புகைத்தால் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில்
  • ஆஸ்த்மா, 
  • சுவாசநோய்கள், 
  • செவியில் கிருமித்தொற்று 
போன்ற பல பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுக்க நேரிடும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
அண்மையில் பின்லாந்து தேசத்தில் செய்யப்பட்ட ஆய்வானது கர்ப்பமாயிருக்கும் போது புகைத்த பெண்களின் குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் உளநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் என்கிறது.

அத்துடன் அவர்கள் வளரும் போது அதற்கான சிகிச்சையாக மருந்துகள் (Psychiatric Drugs) உட்கொள்ள வேண்டி நேரிடலாம் எனக் கூறுகிறது.

முக்கியமாக
  • மனச்சோர்வு (Depression) 
  • கவனக்குறைவு, 
  • அதீத துடியாட்டம் 
போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை செய்ய நேரலாம் என்கிறது.



மனநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இளவயதினரின் மருத்துவக் கோவைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவர்களில் 19.2 சதவிகிதத்தினர் தாயின் கருவில் இருக்கும்போது புகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது தாய் கர்ப்பமாயிருக்கும்போது புகைத்திருக்கிறாள் என்பதாகும்.

அந்த ஆய்வின் பிரகாரம் தினமும் பத்து சிகரட்டுக்கு மேல் புகைத்தவர்களின் குழந்தைகள் கூடியளவு பாதிப்புக்கு ஆளாயினராம்.

இதன் அர்த்தம் என்ன? கர்ப்பமாயிருக்கும்போது பத்து சிகரட்டுக்கு குறைவாகப் புகைக்க வேண்டும் என்பதா?

இல்லை. புகைக்காது இருப்பதே நல்லது.

கர்ப்பமாயிருக்கும் தாய் புகைக்கும்போது அதன் நச்சுப் பொருட்கள் தாயின் இரத்தத்தில் சேர்ந்து தொப்புள் கொடி ஊடாக கருவிற்குப் பரவி அதன் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால்தான் அத்தகைய குழந்தைகள் உளநலக் குறைபாடுகளுக்கு ஆளாவது அதிகமாகிறது.


எனவே கர்ப்பாயிருக்கும் பெண்கள் தமது குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புகைக்காது இருப்பது அவசியம்.

அத்துடன் தனது ஆரோக்கியத்திற்காகவும் புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கணவனும் வீட்டில் உள்ள ஏனையவர்களும் தன்செயலின்றிப் புகைத்தலால் மனைவிக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து என்பதால் தவிர்க்க வேண்டும். அத்துடன் தனது நலனுக்காகவும் புகைக்காதிருப்பது அவசியம்.

தன்செயலின்றிப் புகைத்தலால் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணவும்.

தன்செயலின்றிப் புகைத்தல்

ஒட்டு மொத்தத்தில் எல்லோரும் எக்காலத்திலும் புகைத்தலைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாகும்.

Sourse:- Presented at the Pediatric Academic Societies (PAS) annual meeting, Vancouver, British Columbia, Canada. May4, 2010.


தினக்குரல் பத்திரிகையின் 'ஹாய் நலமா' பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

8 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

புகை பிடிப்போர், கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிநேகிதி said...

நல்ல பதிவு..மொத்தத்தில் எல்லோரும் புகைபிடிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாகும்.

என்னது நானு யாரா? said...

சமூகத்திற்கு ஏற்ற பதிவாக இருக்கிறது. உங்களின் சமூக அக்கறையை நான் பாராட்டியே ஆக வேண்டும்.

இதனை எல்லா ஆண்களும், பெண்களும் படிக்க வேண்டும். புகைபிடித்தல் பல நோய்களுக்கு காரணமாக் இருக்கிறது.

நேரம் இருக்கும்போது என்னுடைய வலைபக்கம் வாருங்கள் நண்பரே!

இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் பற்றி எழுதிகொண்டு இருக்கின்றேன். படித்து பார்த்து உங்களின் கருத்தை சொல்ல வேண்டுகின்றேன். மிக்க நன்றி!

Chitra said...

புகைப் பிடிப்பதினால், குழந்தைக்கு உண்டாகும் பாதிப்புகளை பலர் உணர்வதில்லை. நல்ல தகவல் தொகுப்பு.... பகிர்வுக்கு நன்றி.

velji said...

புகை நமக்கு பகைதான்!

அவசியமான பதிவு!

வந்தியத்தேவன் said...

வணக்கம் டொக்டர்
இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான பெண்கள் புகைபிடிக்கின்றார்கள். குழந்தைகளை தள்ளுவண்டிகளில் தள்ளிக்கொண்டு அவர்கள் புகை விடும் அழகே தனிதான். இதனால் அந்தக் குழந்தைகளுக்கும் பாதிப்பு என ஏனோ அவர்கள் எண்ணுவதில்லை. சிகரட் பெட்டிகளில் கான்சர் சம்பந்தமான பயங்கரப் படங்களுடன் எச்சரிக்கை விட்டும் எவரும் கேட்பதாகத் தெரியவில்லை.

இவர்களினால் ஒரு எதிர்காலச் சந்ததியினரே அழியப்போகின்றனர்,

Dr.எம்.கே.முருகானந்தன் said...

புகையை ஊதாமல் ஒதுக்க வேண்டியமை பற்றிக் கருத்துரைத்த
Blogger சைவகொத்துப்பரோட்டா, சிநேகிதி, Chitra, velji மற்றும் வந்தியத்தேவன். நன்றி.

Anonymous said...

எனது ஆணுருப்பின்; நுனியில் புண் வந்துள்ளது. நாற்றமும் உள்ளது. யென்ன காரணம்

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்