
அந்தப் பையனுக்கு அடுத்த வாரம் திருமணமாக இருந்தது.
ஆயினும் முகத்தில் அதற்கான பூரிப்பைக் காண முடியவில்லை. ஏதேதோ சில்லறைப் பிரச்சனைகள், நோய்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இவன் மனத்தின் உள்ளே ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா? அதனால்தான் சொல்ல வெட்கப்படுகிறானா? நேரிடையாகவே கேட்டேன்.
‘நான் சின்ன வயசிலை கெட்ட பழக்கம் பழகியிட்டன. இப்ப கைவிட்டிட்டன். அதான் அது அது …’ எனத் திணறினான்.
‘அது என்ன கெட்ட பழக்கம்?’
‘நான் என்ரை கையாலேயே …’ மீண்டும் திக்கினான்.
'சுய இன்பமா?’ வினவினேன்.. தான் நினைத்ததை நான் சொல்லிவிட்டேன் என்பதில் அவன் முகம் மலர்ந்தது.
இவனைப்போல சுயஇன்பம் செய்ததையிட்டு குற்ற உணர்வூடன் வருபவர்கள் பலர். இரவில் தானாகவே ஸ்கல்தமாவதால் தனது ஆண்மை பாதிப்படையுமா என பயந்து வரும் இளைஞர்கள் தொகையும் அதிகம்.
உண்மையில் இவை எவையுமே பிற்காலத்தில் பாலியல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும் கெட்ட செயல்களல்ல. ஆபத்தான நோய்களுமல்ல. தன்னைத்தானே நொந்து கழிவிரக்கம் கொள்ள வேண்டிய ஈனச் செயல்களுமல்ல.
பதின்ம வயதுகளில் பையன்களின் ஆண் உறுப்பு வளர்ச்சியடைகிறது. விந்து உற்பத்தியும் தொடங்குகிறது. அது வெளியேற வேண்டும்தானே? பானை நிறைந்தால் நீர் வெளியே சிந்தும். இதுபோல உற்பத்தியாவது ஏதாவது வழியில் வெளியேறவே செய்யும்.
எனவே தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். அவ்வாறு வெளியேறும்போது ஒரு வகை இன்பத்தையும் உணர்கிறான். சற்று ஆராய்ச்சி மனமுள்ள பையன் தனது கையால் அதை வெளியேற்றிப் பார்க்கிறான். அதில் மேலும் ஆனந்தமடைகிறான்.
இதேபோல பெண்பிள்ளைகளும் தமது உறுப்புகளின் வளர்ச்சியை அவதானிக்கிறார்கள் தொட்டுப் பார்க்கிறார்கள். உறுப்பின் மொட்டை வருடுவதால் சுயஇன்பம் பெறுவதுண்டு.
இவை இயற்கையானவை, ஆபத்தற்றவை. எதிர்பாலத்தில் கணவன் மனைவி இடையேயான உடலுறவைப் பாதிக்கப் போவதில்லை.
மாறாக ஓரினப் பாலுறவு சர்ச்சைக்குரியது.
பலரும் தமது பதின்ம வயதுகளில் இதையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள். இதுவும் இயல்பானதுதான்.
ஆனால் ஆபத்தற்றது என்று சொல்ல முடியாது.
காரணம் ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ அங்கு ஒருவரிலிருந்து மற்றவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. அதாவது ஹேர்பீஸ், கொனரியா, சிபிலிஸ் முதல் எயிட்ஸ்வரை எதுவுமே தொற்றக் கூடும். இது ஒரு சாத்தியம் மட்டுமே.
ஆயினும் எனக்கும் தொற்றியிருக்குமோ என மனத்துக்குள் மறுகி துன்பப்பட்டுக் கொண்டிருக்காது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும். இவற்றில் பலவற்றிற்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்கின்றன. வைத்தியரிடம் எதையும் சொல்ல தயங்கவோ, வெட்கப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை. அவர்கள் இரகசியம் காப்பவர்கள்.
வெளிப்டையாகப் பேசி ஆலோசனை பெறாது மனத்துக்குள் அடக்கி வைப்பதால்தான் பலர் திருமணத்தின் பின் குற்ற உணர்வுக்கு ஆளாகி பீதி, பதகளிப்பு, மனச்சோர்வு, உடலுறவில் சிக்கல் போன்ற நோய்களுக்கு ஆளாகி தமது திருமண வாழ்வின் மகிழ்ச்சியையே தொலைத்து விடுகிறார்கள்.
பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத எமது சமூகச் சூழலில் திருமணத்திற்கு முன்னான ஆற்றுப்படுத்தல் (Premarital Councilling) செய்வது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
திருமணமாக இருக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் இது அவசியம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து ஆற்றுப்படுத்துவதற்கு எமது சமுதாயம் தயாராகாத நிலையில் தனித்தனியாகவும் செய்யலாம்.
பாலியல் பிரச்சனைகளுக்கு மட்டுமே இது அவசியம் என்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.
வைத்தியர்தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. மத நிறுவனங்கள் மேலும் பொருத்தமாக இருக்கலாம். மதகுருமார்களுக்கு அதில் சிறு பயிற்சி அளித்தால் போதுமானது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
36 comments:
வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.
நல்ல பதிவு.
நன்றி டாக்டர்
nice post doctor.a much needed one too.
thanks for the explanations and need more like these.
sorry for english reply as i don;t have tamil typing options in office.
வணக்கம் ஐயா
மிகவும் பயனுள்ள வலைப்பூ இதற்கு மதிப்பளிக்கும் வகையில் திரட்டி.காம் தளத்தின் முகப்பில் தனிப்பகுதியாக ”மருத்துவம்” பகுதியில் உங்களுடைய வலைப்பூவை மட்டும் வெளியி்ட்டுள்ளேன்.
உங்களுடைய கருத்துகளையும் தெரியப்படுத்தவும்.
வெங்கடேஷ்
மங்களூர் சிவா உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
வருத்தப்படாத வாலிபன் அவர்களுக்கு,
நன்றி. மேலும் உதவக் கூடிய பதிவுகளைத் தர முயல்வேன்.
திரு வெங்கடேஸ், உங்கள் கருத்துக்கும், திரட்டியில் வெளியிட்டு மேலும் பலருக்கு எட்டச்செய்த உங்கள் பணிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அன்பின் டொக்டர் ஒரு சின்ன சந்தேகம் சில நாட்களாக எனக்கு விறைப்பு ஏற்படுவதில்லை முன்னர் ஏதாவது படம் பார்க்கும்போதோ அல்லது சாதாரணமாகவோ விறைப்பு ஏற்படும் ஆனால் கடந்த சில நாட்களாக அப்படி ஒன்றும் ஏற்படவில்லை ஆனால் ஒரு முறை சுய இன்பம் கண்டபோது எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை என்ன காரணமாக இருக்கும் இன்னமும் திருமணம் ஆகவில்லை.
பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஏனெனில் சுய இன்பத்தின்போது உங்களுக்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லையே.
Dear doctor
I had masterbated since my early age.That lead me to a depession stage.
I suffered a lot. I could not concentrate, laugh or eat. why in india these siddha or ayurveda doctors are advertising medicine for this sickness.Why premature ejaculation happens? Any cure for this.
Dear doctor
I had masterbated since my early age.That lead me to a depession stage.
I suffered a lot. I could not concentrate, laugh or eat. why in india these siddha or ayurveda doctors are advertising medicine for this sickness.Why premature ejaculation happens? Any cure for this.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல சுயஇன்பம் என்பது இயல்பாக வருவது. அது தவறான பழக்கமோ, கெட்ட பழக்கமோ, நோயோ அல்ல. நீங்கள் அதனால் மனவிரக்தி (Depression) அடைந்திருப்பது தேவையற்றது. தயக்கமின்றி அதிலிருந்து வெளி வாருங்கள். உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது மனநல மருத்துவரை அணுகுங்கள். நிச்சயம் குணமாக்கலாம். மற்றவர்களைப் போல நீங்களும் சிரித்து, மகிழ்ந்து, ரசித்து உண்டு, வேலைகளில் கவனக் குவிப்பு செய்து முன்னேறலாம்.
விந்து முந்துதல் முக்கியமாக மனம் சம்பந்தப்பட்டது. அதற்கு மருந்தாக சில Antidepressants உபயோகிக்கப்படுகிறது. உளவளத் துணையும் உதவுகிறது.
நிச்சயம் பலன் கிடைக்கும்.
iyya vanakkam ennaku suya enbam palakkam eruku,enaku thookkathil vinthu veliyerukirathu,muthalil enaku kanavudan veliyeriyathu eppothu kanavinri kuppura paduthu thoonkumbothu thanaha veliyerukirathu,nan gym ku sellum palakkam udayavan,enaku valisollungal iyya
Anonymous. பயப்படவோ குற்ற உணர்வு கொள்ளவோ தேவையில்லை. தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். சுயஇன்பம் இயற்கையானது அல்லாவிடினும் அதனால் பாதிப்பு ஏற்படப் போவதில்லை.
உடற்பயிற்சி மிகவும் நல்லது. தூங்கம் செல்லும்போது வேறு ஆரோக்கியமான விடயங்களில் மனதைச் செலுத்துங்கள்.
Dear DR. Am mastrubating since 13 years now am reached 25 years of old going to get marry, that mastrubating habit will create any problem in my married life pleas make my mind clear, am so sad about it.
Don't get disturbed. Masturbation is a natural event in growth. There is nothing to fear or ashemed of. It wan't affect you married life.
Many mental health experts feel that masturbation can relieve depression, stress and lead to a higher sense of self-worth.
sir,
na 9years ah kai palakam panren.Enakum 2 months la kalyanam.munadi na kai palakam panum poathulam vindhu neraya vanthuthu ana epo romba kamiya varuthu & en urupu romba china tha melisa iruku. ehanala enaku kalaynam pana bayama iruku.enala en wife ah happy ah vachika mudiyuma..pls solunga.my penis is very smal & lean.pls telwhat can i do....
sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
பெயரிலி உங்கள் பயம் வீணானது. பால் உறவுக்கும் அதன் உச்சத்திற்கும் அதன் அளவு தடையல்ல.
அதே போல சுயஇன்பம் செய்ததால் பாதிப்பு ஏற்படாது. இது பற்றி பல தடவைகள் எழுதியுள்ளேன்.
ஆனால் பயமும் பதற்றமும் உடல் உறவைப் பாதிக்கலாம்.
அதற்கு இவை தவறல்ல எனப் புரிந்து கொள்வதே அதிலிருந்து மீளப் போதுமானது.
உங்கள் மனப் பதற்றத்தை குறைக்க உங்களால் முடியாவிட்டால் மருத்துவரை அவசியம் பாருங்கள்.
i had masterbed since 10 yerars .. i won't fear about that.. becaus it's a nature of human being activity. i have strength of my heart. pls don't worry frds anyone have this habit. i've big penis.and i.ve been going to gym yet now. i have six pack.twice ah week i did do that.. it maeans kaipalakam.it's not ashamed of me.. so pls frds don't affraid. always b happy
உங்கள் சேவை நாட்டுக்கு மிக மிக தேவை.
மிக்க நன்றி @ chinnu
hello sir very nice Answer.. sir ennaku oru dute suyainbam seivathumoolam kalyanathuku piragu kuladhai pirapathil sikkalgal varuma?
hi doctor
i have one question for you
ஆண் உறுப்பு கருப்பு ஆவது ஏன் doctor
give me some solution
thankyou
பொதுவாக உடலின் ஏனைய இடங்களை விட அது சற்று கருமையாக இருக்கும். தோல் சுருங்கியிருப்பதும் காரணம்.
இல்லை SHA
Hi doctor i got question my penis getting slowly slowly darker that's means the pink one not the skin so could you tell me why and tell me what is the solution please doctor thank you
Santhu. it's not a disease. a natural transformation of the penile mucosa from Pink colour to darker skin
sir kaipalakkam nature nu sonnika ok but na(from 12age,now 18) daily yum 2 to 3 times materbate panra.vinthu thickness,quantity kammi aiduchu.so,ithunala
1)kolantha pera mudiyuma?
2)appadiyae piranthalum athu physically challenged da irukuma?
3) itha continue pannallamma?
4)intha palakatha vida validan enna???
plz plz plz doctor en question ku ans panunka....:-(
nandri iyya
அன்புள்ள மருத்துவர் அய்யா வணக்கம்!
உங்களின் இந்த சேவை இளைய தலைமுறையை தெளிவான பாதைக்கு எடுத்து செல்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களின் சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.எனக்கு ஆணின் பருவ வளர்ச்சியில் சில ஐயங்கள் உள்ளன அதை தெளிவு படுத்துமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
எனது ஐயம்!
1.உருவான விந்து வெளியேறியே ஆகவேண்டுமா ?
2.அய்யா வெளியேற்ற படாத விந்து என்னவாகும் ?
3.சுய இன்பத்தால் உறுப்பு சினதகும் என்று தொலைகாட்சி இல் எல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா?
respected muruganadhan sir,am pradeep(18),am doing masterbation for past 3 years.as you said,masterbation is not bad,but am doing 2 to 3times per day,so
1)what will be the result if i continue this??
2)am having black lines beacuse of this.what should i do for dissapper??
பிரதீப்.
1. கைப் பழக்கம் இயற்கை என்ற போதும் தொடர்ச்சியாக தினமும் 2-3 முறை செய்வது உடல் பாதிப்பிற்கு மேலாக மனத்தையும் பாதிக்கும். எனவே வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஏனைய பல விடயங்களிலும் அக்கறை காட்டுங்கள். ஈடுபடுங்கள்.
2. குழந்தை கிடைப்பதில் பிரச்சனை இருக்காது.
3. அதீதமாக ஈடுபாடாது இடையிடையே ஈடுபடுங்கள்
4. மனதி்றகு மகிழ்ச்சியளிக்கும் பல்வேறு விடயங்களில் ஈடுபடுவதுதான். விளையாட்டு, நீச்சல், இலக்கியம், சினிமா, புகைப்படக்கலை இப்படி முடிவின்றிச் சொல்லலாம்.
உண்மையானவன்
விந்து தானகவோ அல்லது சுய இன்பம் உடலுறவு மூலமோ வெளியேறும்.
சுய இன்பத்தால் உறுப்பு சின்னதாகும் என்பது தவறான கருத்து.
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்